அமுதப்ரியன்

இட்லிவடைதாசன் நான்
donduவின் பேரன் நான்
விசுவாமித்திரரின் வழிவந்தவன்
நல்லது கெட்டது சொல்லப்போகிறேன்

Saturday, November 21, 2009

வழக்கு சாமியோ வழக்கு


சென்னையில் சுப்பிரமணியசாமி பேட்டி: கூடிய விரைவில் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்கு செய்யப் போகிறேன். பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பிரதமர் இதில் நடவடிக்கை எடுக்கா விட்டால் அவர் மீதும் வழக்கு போடுவேன்.
(நல்ல வேளை இந்த செய்தியை போடாத பத்திரிகைகள் மீது வழக்கு தொடருவேன் என்று சொல்லவில்லை)

இதற்கு என்ன நடக்கும் என்று ஒரு சிறிய கற்பனை!!!

(டில்லியில் ....)

கேள்வி: உங்கள் மீது வழக்கு தொடர்வேன் என்று கூறியிருக்கிறாரே சு.சாமி?
ராசா: யார் அவர்? அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் (தலைவருக்கு அப்படியே SMS அனுப்புகிறார்)


(சென்னையில்...)

கருணாநிதி: பார்த்தாயா தமிழா, தாழ்த்தப்பட்ட சகோதரன் கஷ்டப்படுகிறான்! என்ன செய்யப் போகிறாய்? என்ன சொல்லப் போகிறாய்? பார்ப்பனர்களின் இராஜ்ஜியம் இன்னும் இருக்கிறது? நாம் இன்னும் இதே நிலையில்தான் இருக்கிறோமா?

அதே சென்னையில்

வீரமணி:(வீரம்?) தாழ்த்தப்பட்டவர் மீது வழக்கு தொடர்ந்த பார்ப்பனர் மீது திக சார்பில் வழக்கு தொடரப்படும்.


தமிழ்நாட்டில்..
மக்கள்: மானாட மயிலாடவில் நமிதா போட்டிருந்த டிரஸ் நல்லாயிருந்ததுல்ல..

Friday, November 20, 2009

இட்லிவடையில் வந்த எனது பதிவு

அனைவருக்கும் வணக்கம்.

கடந்த மாதக் கடைசியில் திருவண்ணாமலை சென்றிருந்தேன். அது ஒரு பௌர்ணமி இல்லாத, பிரதோஷம் இல்லாத நாள். கிரிவலம் செல்லும் வழியில் மலையின் நேர் பின்னால் மேற்கு திசையில் வாயு லிங்கம் அருகில் ஒரு மனிதரை (அவருடன் சில சீடர்கள்) சந்திக்க நேர்ந்தது. அவருக்கு வயது கூடிப்போனால் 32 முதல் 35 வயது வரை இருக்கும். ஆனால் அவருடைய சீடர்கள்(அவருடன் இருந்தவர்கள்) அவருக்கு வயது 5000 என்றனர். அவருக்கு அஷ்டமாசித்திகளும் தெரியும் என்றனர். அவருடன் நடந்த ஒரு கலந்துரையாடலை இட்லிவடை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள கொடுக்கிறேன். “பாரடா வான்மதியிலே பார்தான் பாதியாகிடுமே” என்று ஒரு பாடலை எடுத்து விட்டு அதற்கு அர்த்தம் சொல்ல ஆரம்பித்தார். எனது இதயம் பகீர் என்றது.

அவர் சொன்ன பகீர் தகவல்களில் சில:

[1] 2012 உலகம் அழிவு ஆரம்பம்.

[2] கழுகு தற்போது 40 முட்டைகள் இடுகின்றனவாம், கழுகுகள் அதிகரித்தால் மனிதனைக் கொல்லுமாம்.(இதை ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார்)

[3] கிலோ அரிசி 1000ரூபாயைத் தொடுமாம்.

[4] 1பவுன் தங்கம் 50000ரூபாயைத் தொடுமாம்.

[5] ஐரோப்பிய கண்டத்தில் இந்தியாவிற்கு கண்டம் கொடுக்க ஒருவன் உதித்து விட்டானாம். அவனுடைய ஆட்கள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்கள், நகரங்கள் அனைத்திலும் ஊடுருவி உள்ளார்களாம். அனைத்து மக்களுடைய அங்க அடையாளங்கள் ஆவனங்கள் அவனிடத்தில் உள்ளதாம்.

[6] 2012ல் இந்தியாவை வெற்றி கொள்வானாம்.

[7] இந்தியாவில் இருக்கும் அனைத்து CALLCENTER களையும் அந்த ஐரோப்பிய மனிதன் வாங்கிவிட்டான்.

[8] உலகத்தின் மொத்த மக்கள் தொகை 100கோடியாகி விடும்.

[9] மின்சார உற்பத்தி முழுமையாக பாதிக்கப்படும். பின் மின்சாரமே இல்லாமல் போகும்.

[10] சூரியனிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும். சூரியன் ஒளி பாதியாக குறையும்.

[11] 30கோடி பேர்தான் இந்தியாவில் இருப்பார்களாம்.

[12] ஒரே நேரத்தில் சூரியனும் சந்திரனும் தெரியும்.

[13] மக்கள் சாப்பாட்டிற்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள்.

[14] இந்தியாவில் இப்போதிருக்கும் அரசியல் அமைப்பு மாறும்.

[15] இந்தியாவில் அதிபர் தேர்தல் நடக்கும்.

[16] இப்போதிருக்கும் பல நகரங்கள் இந்தியாவில் மூழ்கிப் போகும்.

[17] கடலுக்குள் இருக்கும் நகரங்கள் பல வெளிவரும்.

[18] புதிய புதிய விலங்குகள் உருவாகும்.

[19] புதிது புதிதாக நோய்கள் பிறக்கும்.

[20] உலகமெங்கும் வறட்சியின் பிடியில் இருக்கும்.

என்று நீண்டு கொண்டே செல்கிறது அவரது வாக்கு.

சரி எப்போது இதுவெல்லாம் சரியாகும் என்றேன். 2016ல் முழு உலகம் அழிந்து பின் 2019ல் புது உலகம் பிறக்கும் என்றார் புன்முறுவல் பூத்தபடி. மேலும் உண்மையான ஜோதிடர்களுக்கு இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்றார். (ஐயா ஜோதிடர் ராமகிருஷ்ணன் அவர்களே பதில் தெரியுமா)

நன்றி:இட்லிவடை.

ஒரண்டை மன்னன்

"நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றை காக்கவும், வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்துச் செயல்படுவேன் என்று மனமார உறுதி கூறுகிறேன். நான் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்றும் மதம், மொழி, வட்டாரம் மற்றும் அரசியல் அல்லது பொருளாதார பேதங்களுக்கு அமைதியான முறையிலும், அரசியல் சட்டத்துக்கு உட்பட்டும் தீர்வு காணத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நான் மேலும் உறுதி கூறுகிறேன்"



மேற்படி உறுதிமொழி கருணாநிதி படித்தது..படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்.

Sunday, November 15, 2009

அடப்பாவிகளா...


அட்டாக் பாண்டி மீது ஆள் கடத்தல், அடிதடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கீரைத்துறை காவல் நிலையத்தில் அட்டாக் பாண்டி மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கீரைத்துறை காவல் நிலையத்தின் ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

1999ம் ஆண்டு ஒரு தாக்குதல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் அட்டாக் பாண்டி.

-------------------------------

அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருப்பதால் இவருக்கு மதுரை மாவட்ட வேளாண்மைக் குழுத் தலைவர் பதவி கிடைத்தது.




விளங்குமா நாடு....

Tuesday, November 10, 2009

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவனை

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவனை:
நன்றி: தினமலர்.
{படத்தை க்ளிக் செய்தால் பெரிதாக தெரியும்}




இந்தியா ஜெயிக்குமா, பார்க்கலாம்.

நில ஆக்கிரமிப்பு - உள்ள ஆக்கிரமிப்பு

மார்க்ஸ்சிஸ்ட்டுகளுக்கு எதிராக இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில், கர்நாடக தலைமை நீதிபதி பி.டி. தினகரன், சட்ட விரோதமாக அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, அந்த நிலங்களை தாங்களே மீட்டு, தலித் மக்களுக்கு வழங்கப்போவதாக அறிவித்துக் கொண்டு- அதன் காரணமாக அந்த மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு, அமைதியைக் கெடுக்க முனைந்தபோது- அதைத் தடுத்து- சட்டம் ஒழுங்கு அமைதியைப் பாதுகாக்கும் முயற்சியிலே அரசு ஈடுபட்டால் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.








இந்தப் பிரச்சனை குறித்து ஒரு அறிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டு, இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கிட அரசு தயக்கம் காட்டுவதாகச் சொல்லியிருக்கிறார்.

அது உண்மையல்ல; அரசு நிலங்களையும், புறம்போக்கு நிலங்களையும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, பெரும்பாலும் தலித் மக்களுக்கு இரண்டு ஏக்கர் அளவிற்கு வழங்கும் திட்டத்தையே திமுக அரசுதான் கொண்டு வந்தது என்பதும்- அந்தத் திட்டத்தை பெரியாரின் பிறந்தநாளான 17.9.2006 அன்று இதே திருவள்ளூர் மாவட்டத்தில்தான் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 2,10,747 ஏக்கர் நிலம், 1,75,798 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு, குறிப்பாக தலித் மக்களுக்கு இலவசமாக இந்த அரசினால் வழங்கப்பட்டுள்ளது என்பதை அப்படியே முழு பூசனிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பது போல மறைத்துவிட்டு, இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கிட நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்குவதாகவும் அறிக்கை விடுத்திருக்கிறார்கள் என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு எந்த அளவிற்கு போகாத வழியெல்லாம் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

சமுதாய ஏற்றத்தாழ்வுகளைப் போக்க நில உடைமைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயித்து, மிகை நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கி, உழுபவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் என்ற நோக்கத்தோடு பாடுபட்டு வருவதுதான் திமுக ஆட்சி.

கழக ஆட்சியிலேதான் 1970ம் ஆண்டு நில உச்சவரம்பு 15 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்று திடீரென்று சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தின் காரணமாக 1, 78,880 ஏக்கர் நிலம், உபரி நிலம் என்று கைப்பற்றப்பட்டு, தகுதியுள்ள நிலமற்ற 1,37,236 ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் 61,985 பேர் தலித் மக்கள், 204 பேர் பழங்குடியினர்.

கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பெருமழை பெய்து மக்கள் எல்லாம் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அமைச்சர்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்டங்களுக்குச் சென்று நிவாரணப் பணிகளிலே ஈடுபட்டிருக்கின்றார்கள்.

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நேரத்தில் இதற்கு முன்பெல்லாம் எப்போதும் நிவாரணப் பணிகளிலே, மக்கள் பணிகளிலே ஈடுபடக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மழையையொட்டி ஆற்றிட வேண்டிய மக்கள் பணியை ஒத்திவைத்து விட்டு, தனி மனிதர் ஒருவருக்கு எதிராக நிலமீட்பு என்ற பெயரில் போராட்டம் நடத்த முற்பட்டு, அதிலே அக்கறை செலுத்துகிறார்கள் என்றால் இது அரசியலில் உச்ச கட்டம் என்பதைத் தவிர வேறல்ல.

இவர்கள் யாருக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள்? அவரும் ஒரு தலித் தான். நீதிபதியாக இருக்கிறார். அவர் மீது இந்த நிலம் பற்றிய புகார் கூறப்பட்ட காரணத்தால், உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்று செல்ல வேண்டியது தடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று "டைம்ஸ் ஆப் இந்தியா'' இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார்.

எந்த அரசாங்க நிலத்தையோ, பொது நிலத்தையோ தான் ஆக்கிரமிக்கவில்லை என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். ஆனால் நீதிபதி அங்கே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஒரு அரசாங்கம் செயல்பட முடியாது. அப்படி செயல்பட்டால், உடனடியாக ஒரு தலித் குடிமகனின் நிலத்தை கைப்பற்ற இந்த அரசு ஏன் இவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுத்தது என்று இதே கட்சியினர் ஒரு போராட்டம் நடத்தக்கூடும். தனிப்பட்ட ஒருவர் நிலம் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் கூட அதை எதிர்த்து அரசாங்கம் தான் நடவடிக்கை எடுத்து, அந்த ஆக்கிரமிப்பு உண்மையாக இருந்தால், அந்த நிலங்களைக் கைப்பற்றி, அதன் பிறகுதான் மற்றவர்களுக்கு வழங்கலாமே தவிர, தனிப்பட்ட ஒரு கட்சியினர் தாங்களே நிலத்தை மீட்டு, தாங்களே வழங்குவோம் என்றால் அது சட்டம், ஒழுங்கு, அமைதிக்கு முறையானது தானா?.

ஒவ்வொரு கட்சியினரும் இவ்வாறு சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, தாங்களும் நிலங்களையோ, கட்டிடங்களையோ கைப்பற்றி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்குகின்றோம் என்றால் இதென்ன தமிழ்நாடா? மேற்கு வங்கமா?

சட்டம், ஒழுங்கு, அமைதியைக் கெடுக்கும் வகையில் ஒரு கட்சியினர் நடக்க முற்படும் போது, தடையை மீறி நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று சொல்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முனைந்தால், அது காவல்துறையினரின் "கையாலாகாத்தன''த்திற்கு எடுத்துக்காட்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார்.

எது கையாலாகாத்தனம்? சட்டத்தை மீறியவர்களை கைது செய்தது கையாலாகாத்தனம் என்றால்; அவர்களை உடனடியாக விடுதலை செய்து வீட்டிற்கு அனுப்பியது அதைவிட பெரிய கையாலாகாத்தனம் அல்லவா? இதுதானே நண்பர் வரதராசனின் கணிப்பு?.

நீதிபதி தினகரன் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார் என்று கூறி அதை மீட்டு தலித் மக்களுக்கு வழங்கப்போகிறேன் என்று போராட்டம் நடத்த அவசரம் காட்டுகின்ற இதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நண்பர்கள் சிறுதாவூரில் ஜெயலலிதா; தலித்களுக்காக வழங்கப்பட்ட அரசு நிலத்தை அபகரித்து, ஆக்கிரமித்து வைத்திருப்பதாக எத்தனையோ மாதங்களுக்கு முன்பு சொன்னார்களே.

இத்தனை மாதங்களாக அதற்காக மீட்புப் போராட்டம் நடத்த ஏன் முன்வரவில்லை? இங்கே மட்டும் அவசரம் காட்டுவதற்கு என்ன உள்நோக்கம்?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


ருணாநிதிக்கு ஒரு கேள்வி எதற்கெடுத்தாலும் அவர் தலித், இவர் தலித் என சொல்கிறீரே, அப்படியென்றால் தலித் தவறு செய்தால் தண்டனை கொடுக்க கூடாதா[மனுநீதியில் பார்ப்பான் தவறு செய்தால் அவனுக்கு தண்டனை கொடுக்ககூடாது என்று உள்ளது போல இது நவீன தலித் நீதியா]

ராசா செய்துள்ளது மிகவும் மட்டமான கேவலமான திருட்டு. தினகரன் செய்துள்ளது வெட்கக்கேடு. இதற்கு வக்காலத்து வாங்குவது மடமையிலும் மடமை.
அது சரி.
திருட்டு முட்டாள் ழகத்தின் தலைமை என்றால் சும்மாவா.

ஈழத்தமிழரின் நிலைமைக்கு வெறும் 12 கோடி. வெள்ளத்தின் பிடியில் இறந்து போன மக்களுக்கு வெறும் 10 கோடி. ஆனால் நீங்கள் வக்காலத்து வாங்கும் மனிதர்கள் செய்துள்ள மோசடி பத்தாயிரம் கோடிகளுக்கு மேலய்யா?

Wednesday, November 4, 2009

வந்தே ஏமாத்தறோம்


அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...
வந்தே மாதரத்துக்கு எதிராக பத்வாவாம். என்னப்பா இது எதுஎதுக்கெல்லாம் பத்வா கொடுக்கனும்னு ஒரு முறையில்லையா..போங்கடா போங்க..ஊழல், லஞ்சம் போன்ற முறைகேட்டிற்கு எதிராக பத்வா கொடுங்க...

Thursday, March 5, 2009

பாபுஜி(காந்திஜி) திரும்பி வந்தால்....

செய்தி: காந்திஜி பயன்படுத்திய பொருட்களை அமேரிக்காவில் ஏலம் விடப் போகின்றனர். இதை மத்திய அரசு தடுக்க பல வித முயற்சிகளை எடுத்து வருகிறது.



விளக்கம்:ஆமாம், அவரையும் மறந்து விட்டோம், அவரது கொள்கைகளையும் தான் நாமே ஏலம் விட்டு விட்டோமே, அவர் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விட்டால் என்ன? விடாட்டால் என்ன? நல்லவேளை இதையெல்லாம் பார்க்க மகாத்மா இல்லை. அவர் மட்டும் இருந்திருந்தால், " காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய தொ(ல்)லைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன,புத்தம் புதிய கவர்ச்சித் திரைப்படம்" என அறிவித்து அவரையும், அவரது கொள்கைகளையும் கேவலப்படுத்துவதைப் பார்த்தே நொந்து இருப்பார்.

Wednesday, March 4, 2009

பிரமோஸ் பிரம்மாண்ட வெற்றி....



ஈழம், இந்திய மக்களவைத் தேர்தல், ஒபாமா, வக்கீல்-போலீஸ் வன்முறை, உண்ணாவிரத அறிவிப்புகள், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல், IPL போட்டி, ஸ்டார் கிரிக்கெட் - இவையெல்லாம்தான் இன்று நான் பல blogகளில் பார்த்தவை.


ஆனால் இவையையும் சேர்த்து, இந்த செய்தியையும் படியுங்கள்.



கடந்த ஜனவரி மாதம் 20ம் தியதி ஒலியை விட வேகமுள்ள இந்திய இரஷ்ய கூட்டுத் தயாரிப்பான "ப்ரம்மோஸ்" ஏவுகனை சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஆனால் அது சரியாக இலக்கைத் தாக்காததால், தோல்வியில் முடிந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு, இன்று சோதனை, இந்திய ராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் எம் எஸ் தத்வால் முன்னிலையில் பொக்ரானில் நடந்தது. சரியான இலக்கைத் தாக்கியதால் அது வெற்றி பெற்றது.





வந்தே மாதரம்!!!!

தேர்தல் திருவிழா பாகம்- 3






செய்தி: அதிமுகவுடன் எங்கள் கட்சிக்கு கூட்டணி பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் தமிழகம் முழுவதும் ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி.





விளக்கம்: பிரச்சாரம் நீங்கள் செய்யாமல் இருந்தால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

தேர்தல் திருவிழா - பாகம் 2

தேர்தல்: இந்த ஒரு வார்த்தை மக்களையும், நாட்டையும் எப்படி கட்டிப்போட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

கூட்டணி நிலவரம்( தேர்தல் ரிசல்ட் மாதிரி இதுவும் ஒரு சம்பிரதாயம் ஆகி விட்டது ) -:-

மாநிலம்-தமிழ்நாடு:
[1] திமுக - காங்கிரஸ் - விடுதலை சிறுத்தைகள் - போட்டி மதிமுக - இவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி
[2] அதிமுக - மதிமுக - கம்யூனிஸ்ட்கள்
[3] தேமுதிக
[4] பாரதிய ஜனதா
[5] பாட்டாளி மக்கள் கட்சி
[6] அஇசமக
[7] அஇநாமக
மற்றும் பல....

இது இப்போதைய நிலவரம்தான்...இன்னும் போகப் போகத் தெரியும்....
யார் யார் யார் பக்கம் என்று.....

Tuesday, March 3, 2009

திரையுலகில் அரசியல் வேண்டாம் - ரஜினி



செய்தி: திரையுலகில் அரசியல் வேண்டாம். சொல்பவர் ரஜினி.


---------------------------------------------------------------------------------------


அரசியல் என்பது சாக்கடை என்று நடுநிலையாளர்கள் சொல்வார்கள். இதை யார் வேண்டுமானலும் சொல்லலாம். ஆனால் சொல்பவர் யார் என்று தான் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு நிலைப்பாடு, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மூவ் என உள்ளவர் சொல்லலாமா என்பதுதான் நமது கேள்வி? நடுநிலையாளன் என்பவர் ஒரு பக்கமும் சாயாத பாபாவாக இருக்க வேண்டும். ஆனால் நமது சூப்பர் ஸ்டார் அப்படி இருக்கிறாரா? தமிழ்த்திரையைப் பொருத்தவரை தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம் நம் சூப்பர் ஸ்டார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அரசியல் என்ற வார்த்தை அவரது வாயிலிருந்தே வரவேண்டாம் என்பதே நம் கருத்து. கிராமப்புறங்களில் ஒரு சொலவடை உண்டு...."எல்லாருக்கும் ஒருத்தன் நல்லவனா இருக்க முடியாது" என்பது அது. இதை ரஜினி உணர வேண்டும்.

மறையை மதிக்கா மாறைகள்

செய்தி: இலங்கை வீரர்கள் லாகூரில் தாக்கப்பட்டனர்.


விளக்கம்:இன்று பாகிஸ்தான் லாகூரில் நடந்த விஷயம் ஒன்றும் விந்தைக்குரியது இல்லை. இந்த மாதிரி நடக்காமல் இருந்தால் தான் அது புதிது.

---------------------------------------------------------------------------------------

நீதி: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

மேலே உள்ள செய்திக்கும் இந்த நீதிக்கும் சம்பந்தமில்லை.

--------------------------------------------------------------------------------------


Monday, March 2, 2009

தேர்தல் திருவிழா வந்தாச்சு 1

நிகழும் மங்களகரமான 1184ம் ஆண்டு விரோதி வருஷம் உத்தராயணம் வருஷ ரிது சித்திரை மாஸம் 3ம் தியதி(இங்கிலீஸு 16/04/2009) முதல் "முதல் போட்டு மக்களின் தலையில் கல்லைப் போட்டு" ஊழல் நக்ஷத்திரத்தில் கூட்டனி யோகத்தில் கள்ள ஓட்டு லக்னத்தில் தேர்தல் நடத்த உத்தமம்.

சுபம்.

ஜோதிடர்: தேர்தல் ஆணையம், புதுடில்லி.

Thursday, February 26, 2009

நடிப்பு - ஒரு துறை சார்ந்தது அல்ல



செய்தி - 1: முதல்வர் கருணாநிதி மருத்துவ குழுவினரின் ஆலோசனைக்கு உடன்பட்டு உண்ணாவிரத முடிவை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது கோரிக்கையை அவர் ஏற்கவில்லை என்றால் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
விளக்கம்: உண்ணாவிரதம் என்பது தற்போது ஒரு நாகரீகச் சொல் ஆகி விட்டது. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் (முக்கியமாக மக்களை) ஏமாற்ற உதவும் சொல்லாகி விட்டது.

செய்தி - 2: தமிழக அரசின் வரி வருவாய் தேவையற்றபடி ஆடம்பரமாக செலவழிக்கப்படுகிறது. சரியான திட்டங்களுக்காக அது பயன்படுத்தப்படவில்லை.
- எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்.

விளக்கம்: நமது கழக ஆட்சியில் தவறாக பயன்படுத்தப் படாமல், மிகச்சரியாக மக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. எம்.எல்.ஏ வாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.ம்ம்ம்...( விட்டால் படத்தில் தெ(எ)ரியும் zero வாட்ஸ் பல்பு கூட தவறாக எறிகிறது என்பீர்கள் போல )
ஒரு சில உதாரணங்கள்:
[1] தான் செல்வதென்றால் முன்னும் பின்னும் 1000 கார்கள் வலம் வரச் செய்தது யார் என்று தெரியுமா?
[2] எந்த ஒரு அரசு விழாவானாலும் இரயிலில் செல்லாமல், தனி விமானம் மூலம் செல்வது யார் என்று தெரியுமா?
மேலும் பல..

Tuesday, February 24, 2009

சோனியாவின் முடிவு

இலங்கை விவகாரத்தில் மெளனம் சாதித்து வருவதால் தமிழகத்தில் மக்களிடையே காங்கிரஸ் மீது வெறுப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை அனுப்ப அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது.போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கும், இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கும் உணவு, உடை, மருந்துப் பொருட்களை அனுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்தப் பொருட்களைத் திரட்டுமாறு தமிழகம் உள்ளிட்ட தென் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.இந்தப் பொருட்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கும் சோனியா உத்தரவிட்டுள்ளார்.போர் நிறுத்தம் தொடர்பாக தீவிர நடவடிக்கை எதையும் எடுக்காமல், இப்போது திடீரென நிவாரணப் பொருட்களை அனுப்புவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------
அர்ஜூன்: ஏட்டையா நான் போய் டிஞ்சர் வாங்கிட்டு வரேன்..
வடிவேலு:மூஞ்ச பஞ்சர் ஆக்கிட்டு டிஞ்சரா, ஏன் இந்த கொலைவெறி?
அர்ஜூன்:போங்க ஏட்டையா, உங்க மூக்கு பிஞ்சு மூக்கு...
சத்தியமா மேல உள்ள செய்திக்கும் இந்த ஜோக்கும் சம்பந்தமில்லை...
-----------------------------------------------------------------------

Monday, February 23, 2009

என்ன நினைச்ச, நீ என்ன நினைச்ச - சொக்கத்தங்கம்


நேற்று வரையில் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு இல்லை; உறவு இல்லை என்று கூறிக் கொண்டிருந்து விட்டு, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஏமாற்றி விட்டு, திருமண விழாவில், "நானும் காங்கிரசும் கூட்டுச் சேரப் போகிறோம்' என்று நாட்டை ஏமாற்றுகின்ற அரசியல் நாட்டியம் எனக்குத் தெரியாது.சோனியா காந்தி என்ற அந்தச் சொக்கத் தங்கத்தை, பதி பக்தி இல்லாதவர்' என்று சொன்னவர் யார் என்று எனக்கும் தெரியும். நாட்டுக்கும் தெரியும்.பதி பக்தியைப் பற்றி அவ்வாறு பேசியவர், எம்ஜிஆரைப் பற்றி ராஜீவ் காந்திக்கு கைப்பட என்ன கடிதம் எழுதினார் என்பதும் எனக்குத் தெரியும்.இப்படிப்பட்டவரை காங்கிரஸ் கட்சி, கூட்டணி சேர்த்துக் கொள்ள வேண்டுமாம்! கடமை தவறாத நண்பர் வீரப்ப மொய்லி(ஐயோ,ஐயோ,வயிறு வலிக்குது, தாங்க முடியலடா சாமி)-இவருக்கு அளித்த மறுப்பு, தமிழ்நாட்டு காங்கிரஸ் நண்பர்களே, எண்ணிப் பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு!.சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணையில், உண்மை எது? உண்மை அற்றது எது? திட்டமிட்டது எது? திட்டமிடாமல் நடந்தது எது? கலகத்துக்குக் காரணம் வழக்கறிஞர்களா? அல்லது காவல் துறையினரா?.அல்லது இந்த விபரீத நிகழ்ச்சிக்குக் காரணமான வீசப்பட்ட முட்டைகள், அழுகிய முட்டைகளா? என்ற விவரங்கள் எல்லாம் சி.பி.ஐ. விசாரணை மூலம் விரைவாகத் தெரிந்து விடும்.இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கும்போது, நானும், தமிழகத்தில் அமைதியோடு வாழ்கிற மக்களும் சி.பி.ஐ. விசாரணையின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இதைத் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சியினரும், எல்லா கட்சித் தலைவர்களும், இதை தொடர்கதையாக ஆக்குவதற்கு இடம் தராமல் முடிந்து போன சோக நிகழ்ச்சி என்ற அளவில் இப்போதுநடந்து கொண்டிருக்கின்ற நல்லாட்சி தொடர உதவி வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

A(ஆஸ்கார்).R(ரெண்டு).ரஹ்மான்


தமிழர்களின் பெருமையை திக்கெட்டும் வெற்றி முரசு கொட்ட வைத்த தமிழன் ஆஸ்கார் நாயகன்......

Wednesday, February 4, 2009

மீண்டு(ம்) வந்தவன்....

அனைவரும் நலமா?
வெகு நாட்களுக்குப் பிறகு, பூ(வலைப்பூ) வுலகத்திற்கு மீண்டு(ம்) வந்திருக்கிறேன்.
இனி,
நீங்கள் தினமும் எனது UPDATESகளை காணலாம்.....