அமுதப்ரியன்

இட்லிவடைதாசன் நான்
donduவின் பேரன் நான்
விசுவாமித்திரரின் வழிவந்தவன்
நல்லது கெட்டது சொல்லப்போகிறேன்

Thursday, August 28, 2008

கருப்புச் சட்டைச் சொந்தக்காரன் யார்?


கருப்புச்சட்டையைப் போட்டுக் கொண்டு ஆன்மீகம் பரப்புகிறார் கமல்..
டைரக்டர்( ஓடாத படம் ).

யேய்,

கருப்புச்சட்டை என்ன உன் ஏக போக உரிமையா?

சபரிமலை செல்பவர்கள் கருப்புச்சட்டை அணிவார்கள் ....
நீயெல்லாம் லொள்,லொள் என்று கத்தியும் ....
வருடா வருடம் கூட்டம் கூடிக் கொண்டேப் போகிறதே!!!

இனியாவது புருடா விடாமலிரு!!!!!

பகுத்தறிவா---பகுத்தூ அறிவா?

இன்றைய விடுதலை பத்திரிகையில் ஒரு பெட்டிச் செய்தி...
இப்படி:-

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களே!!!விநாயகன் போல் குழந்தை பிறந்தால் கொஞ்சுவீர்களா?

அட பேதை பிடித்தவர்களா?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சடா!!!

நீ மதத்தை எதிர்ப்பவனாய் இருந்தால் இருந்து விட்டுப் போ!!!
ஆனால் நீ தாய்மையை இழிவுபடுத்தாதே!!!!!!
இழிவுபடுத்தாதே!!!!

வந்தே மாதரம் என்பதற்கு வந்தே (ஏ)மாத்தறோம் என்று சொன்ன பேடிகள் நீங்கள்!!!!

நீங்களா பகுத்தறிவுவாதிகள்....இல்லை....நீங்கள்
பகுத்தூ அறிவாதிகள்

Wednesday, August 13, 2008

நம்பினார் கெடுவார்.....

காங்கிரஸை நம்பி கருணாநிதி எந்த முடிவும் எடுத்துவிடக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறியுள்ளார்.

திருச்சியில் அவர் பேசியதாவது:மத்தியில் காங்கிரசுடன் நாங்கள் கூட்டணி வைத்துக் கொண்டதற்கு காரணமே, குறைந்தபட்ச வேலை திட்டம், மதவாதத்தை ஒழிப்பது, விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, ஊழலை ஒழிப்பது ஆகிய காரணங்களை முன் வைத்துத் தான். ஆனால் இவற்றை எல்லாம் காங்கிரஸ் காற்றில் பறக்க விட்டுவிட்டது.


[நல்லகண்ணுவே, நல்ல கண்ணோடு பார்.


காங்கிரஸோடு, திமுகவும் எல்லாவற்றையும் சேர்த்து மானத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டது]


மொத்தத்தில் உங்களோடு சேர்ந்து நாங்களும் நம்பினோம், ஆதலால் கெட்டோம்...









சுதந்திர போலீஸ் - போலீஸ் சுதந்திரம்

நமது நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


30 லட்சம் பேர் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை நாம் பாதுகாப்புடன் தான் கொண்டாட வேண்டியுள்ளது.


நாடு எங்கே போகிறது?????????


மன வலியுடன்,

இந்தியத்தமிழன்.

Tuesday, August 12, 2008

கெடு - கேடு

புதுடில்லி:- சிபு சோரன் 48 மணி நேரத்தில் தன்னை ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஆக்கா விட்டால் மத்திய அரசைக் கவிழ்ப்பதோடு, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று கெ(கே)டு விதித்துள்ளார்.

கெடுவான் கேடு நினைப்பான்.
------------------------------------------------------
சம்பந்தப்பட்ட குறள்:
மழை எதற்காக பெய்கிறது?
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யெனப் பெய்யும் மழை.
---
நல்லார் - ஓட்டுப் போடும் இயந்திரம்.
------------------------------------------------------


நமது நாட்டின் சூப்பர் சட்டங்கள் - Part 1


ஒரு சாதாரண குடிமகன் ஒரு தவறு( எ.டு. : கொலைக்கு உதவியாய் இருத்தல் ) செய்தான் என்றால் அவனுக்கு குறைந்தது ஒரு 2 வருட சிறை தண்டனையாவது கிடைக்கும், ஆனால் நமது போலீஸ்காரர்கள் தவறு செய்தார்கள் என்றால் அவர்கள் தண்டனை என்ன தெரியுமா?

[1] இடமாற்றம்

[2] பணி இடை நீக்கம்

[3] 6 மாதம் - 2 வருடம் - மாதாமாதம் ஒரு தொகையை பிடித்தம் செய்வது.

[4] மேல் விசாரணை.


இவ்வளவே.....


மேலும்,

மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்,

இந்த போலீஸ் துறையினர் செய்யும் லஞ்ச ஊழல்கள் அரசுக்குத் தெரியாமல் இருக்குமா?

மொத்தத்தில் இந்த நாடு உருப்படாது........


தொடரும்................

பிந்திராவின் மந்திரா


இனிமேலாவது நமது நாட்டில் கிரிக்கெட்டுக்கு மட்டும் மரியாதை தராமல் அனைத்து விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

--------- நெத்தியடி அபினவ் பிந்திரா

Saturday, August 9, 2008

இந்து முஸ்லிம்கள் ஒற்றுமை

நாம் நினைத்து நினைத்து பெருமைப்பட வேண்டிய விஷயம்.

திருப்பத்தூரில் இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து தர்ஹாவில் சந்தணம் பூசுதல் விழாவும், கோவிலில் பால்குடம் அபிஷேக விழாவும் இணைந்து நடத்தினர். 67 வருடங்களாக இவ்விழா நடந்து வருகிறது..

உலகத்திற்கே தமிழன்தான் வழிகாட்டியாக இருப்பான் போலும்.