அமுதப்ரியன்

இட்லிவடைதாசன் நான்
donduவின் பேரன் நான்
விசுவாமித்திரரின் வழிவந்தவன்
நல்லது கெட்டது சொல்லப்போகிறேன்

Thursday, March 5, 2009

பாபுஜி(காந்திஜி) திரும்பி வந்தால்....

செய்தி: காந்திஜி பயன்படுத்திய பொருட்களை அமேரிக்காவில் ஏலம் விடப் போகின்றனர். இதை மத்திய அரசு தடுக்க பல வித முயற்சிகளை எடுத்து வருகிறது.



விளக்கம்:ஆமாம், அவரையும் மறந்து விட்டோம், அவரது கொள்கைகளையும் தான் நாமே ஏலம் விட்டு விட்டோமே, அவர் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விட்டால் என்ன? விடாட்டால் என்ன? நல்லவேளை இதையெல்லாம் பார்க்க மகாத்மா இல்லை. அவர் மட்டும் இருந்திருந்தால், " காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய தொ(ல்)லைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன,புத்தம் புதிய கவர்ச்சித் திரைப்படம்" என அறிவித்து அவரையும், அவரது கொள்கைகளையும் கேவலப்படுத்துவதைப் பார்த்தே நொந்து இருப்பார்.

Wednesday, March 4, 2009

பிரமோஸ் பிரம்மாண்ட வெற்றி....



ஈழம், இந்திய மக்களவைத் தேர்தல், ஒபாமா, வக்கீல்-போலீஸ் வன்முறை, உண்ணாவிரத அறிவிப்புகள், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல், IPL போட்டி, ஸ்டார் கிரிக்கெட் - இவையெல்லாம்தான் இன்று நான் பல blogகளில் பார்த்தவை.


ஆனால் இவையையும் சேர்த்து, இந்த செய்தியையும் படியுங்கள்.



கடந்த ஜனவரி மாதம் 20ம் தியதி ஒலியை விட வேகமுள்ள இந்திய இரஷ்ய கூட்டுத் தயாரிப்பான "ப்ரம்மோஸ்" ஏவுகனை சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஆனால் அது சரியாக இலக்கைத் தாக்காததால், தோல்வியில் முடிந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு, இன்று சோதனை, இந்திய ராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் எம் எஸ் தத்வால் முன்னிலையில் பொக்ரானில் நடந்தது. சரியான இலக்கைத் தாக்கியதால் அது வெற்றி பெற்றது.





வந்தே மாதரம்!!!!

தேர்தல் திருவிழா பாகம்- 3






செய்தி: அதிமுகவுடன் எங்கள் கட்சிக்கு கூட்டணி பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் தமிழகம் முழுவதும் ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி.





விளக்கம்: பிரச்சாரம் நீங்கள் செய்யாமல் இருந்தால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

தேர்தல் திருவிழா - பாகம் 2

தேர்தல்: இந்த ஒரு வார்த்தை மக்களையும், நாட்டையும் எப்படி கட்டிப்போட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

கூட்டணி நிலவரம்( தேர்தல் ரிசல்ட் மாதிரி இதுவும் ஒரு சம்பிரதாயம் ஆகி விட்டது ) -:-

மாநிலம்-தமிழ்நாடு:
[1] திமுக - காங்கிரஸ் - விடுதலை சிறுத்தைகள் - போட்டி மதிமுக - இவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி
[2] அதிமுக - மதிமுக - கம்யூனிஸ்ட்கள்
[3] தேமுதிக
[4] பாரதிய ஜனதா
[5] பாட்டாளி மக்கள் கட்சி
[6] அஇசமக
[7] அஇநாமக
மற்றும் பல....

இது இப்போதைய நிலவரம்தான்...இன்னும் போகப் போகத் தெரியும்....
யார் யார் யார் பக்கம் என்று.....

Tuesday, March 3, 2009

திரையுலகில் அரசியல் வேண்டாம் - ரஜினி



செய்தி: திரையுலகில் அரசியல் வேண்டாம். சொல்பவர் ரஜினி.


---------------------------------------------------------------------------------------


அரசியல் என்பது சாக்கடை என்று நடுநிலையாளர்கள் சொல்வார்கள். இதை யார் வேண்டுமானலும் சொல்லலாம். ஆனால் சொல்பவர் யார் என்று தான் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு நிலைப்பாடு, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மூவ் என உள்ளவர் சொல்லலாமா என்பதுதான் நமது கேள்வி? நடுநிலையாளன் என்பவர் ஒரு பக்கமும் சாயாத பாபாவாக இருக்க வேண்டும். ஆனால் நமது சூப்பர் ஸ்டார் அப்படி இருக்கிறாரா? தமிழ்த்திரையைப் பொருத்தவரை தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம் நம் சூப்பர் ஸ்டார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அரசியல் என்ற வார்த்தை அவரது வாயிலிருந்தே வரவேண்டாம் என்பதே நம் கருத்து. கிராமப்புறங்களில் ஒரு சொலவடை உண்டு...."எல்லாருக்கும் ஒருத்தன் நல்லவனா இருக்க முடியாது" என்பது அது. இதை ரஜினி உணர வேண்டும்.

மறையை மதிக்கா மாறைகள்

செய்தி: இலங்கை வீரர்கள் லாகூரில் தாக்கப்பட்டனர்.


விளக்கம்:இன்று பாகிஸ்தான் லாகூரில் நடந்த விஷயம் ஒன்றும் விந்தைக்குரியது இல்லை. இந்த மாதிரி நடக்காமல் இருந்தால் தான் அது புதிது.

---------------------------------------------------------------------------------------

நீதி: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

மேலே உள்ள செய்திக்கும் இந்த நீதிக்கும் சம்பந்தமில்லை.

--------------------------------------------------------------------------------------


Monday, March 2, 2009

தேர்தல் திருவிழா வந்தாச்சு 1

நிகழும் மங்களகரமான 1184ம் ஆண்டு விரோதி வருஷம் உத்தராயணம் வருஷ ரிது சித்திரை மாஸம் 3ம் தியதி(இங்கிலீஸு 16/04/2009) முதல் "முதல் போட்டு மக்களின் தலையில் கல்லைப் போட்டு" ஊழல் நக்ஷத்திரத்தில் கூட்டனி யோகத்தில் கள்ள ஓட்டு லக்னத்தில் தேர்தல் நடத்த உத்தமம்.

சுபம்.

ஜோதிடர்: தேர்தல் ஆணையம், புதுடில்லி.